நகைகள் எடை குறைவு புகார்; ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைவு குறித்து விளக்கம் கேட்டு ஊழியர்கள் 36 பேருக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், ஆபரணங்கள் உள்ளது. இதுபோல் திருவிழா காலங்களில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் வாகனங்கள், சப்பரங்கள், பல்லக்கு மற்றும் தேர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோயிலில் அன்றாடம் பயன்பாட்டில்  உள்ள தங்கம், வெள்ளி நகைகளில் எடை குறைவு இருப்பதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ. 16 லட்சம் எனவும், இதற்கான விளக்கம் அளிக்கவும், குறித்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள் 36 பேருக்கு கோயில் நிர்வாகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஊழியர்கள் பலர் பணி ஓய்வு பெற்று சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: