நவம்பர் 1ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம், துணை மின் நிலையம் (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், கே.கே. நகர் கோட்டத்திற்கு  கே.கே. நகர், துணைமின் நிலைய வளாகத்திலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கோட்ட அலுவலகத்திலும்,

டி.எச். ரோடு, மணிக்கூண்டு எதிரில் உள்ள தண்டையார்பேட்டை கோட்ட அலுவலகத்திலும் மின் நுகர்வோருக்கான குறைதீர்வு கூட்டங்கள் செயற்பொறியாளர்கள் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்துகொண்டு, குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: