டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: ஜொலிக்கும் டாப் 8 நட்சத்திரங்கள்

மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆண்டு இறுதி உலக தரவரிசையில் ‘டாப் 8’ வீராங்கனைகள் பங்கேற்கும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர், அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் நகரில் நாளை தொடங்குகிறது. இரட்டையர் பிரிவின் டாப் 8 ஜோடிகளும் இந்த தொடரில் களமிறங்க உள்ளனர். இந்த தொடருக்கான கோப்பை  அறிமுக  நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திர வீராங்கனைகள், நவீன ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்தனர்.

அமர்ந்திருப்பவர்கள்:  இகா ஸ்வியாடெக் (போலந்து, நம்பர் 1),  ஆன்ஸ் ஜெபர் (துனிசியா, 2வது ரேங்க்), கரோலின் கார்சியா (பிரான்ஸ், 6வது ரேங்க்). பின் வரிசை (இடமிருந்து...)   டாரியா கசட்கினா (ரஷ்யா, 8வது ரேங்க்), மரியா சாக்கரி (கிரீஸ், 5வது ரேங்க்),  கோரி காஃப் (அமெரிக்கா, 4வது ரேங்க்),  ஜெசிகா பெகுலா (அமெரிக்கா, 3வது ரேங்க்),  அரினா சபலென்கா (பெலாரஸ், 7வது ரேங்க்). இந்நிகழ்ச்சியின்போது  டபிள்யூடிஏ பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் 16 பேரின் அலங்கார அணிவகுப்பும் நடந்தது.

Related Stories: