வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன்லைன் டாக்டர் பட்டம் செல்லாது: யுஜிசி, ஏஐசிடிஇ அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைனில் படித்து பெறும் டாக்டர் பட்டம் செல்லாது என்று யுஜிசி, ஏஐசிடிஇ தெரிவித்துள்ளன. தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலம் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறலாம் என்ற விளம்பரங்களை பார்த்து மாணவர்கள், மக்கள் ஏமாற வேண்டாம் என ஒன்றிய அரசு ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில் எச்சரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பெறும் பல்கலைக் கழக முனைவர் பட்டம் செல்லாது என்று பல்கலை மானியக்குழுவும், ஏஐசிடிஇ.யும் அறிவித்துள்ளன.

இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ இணைந்து வெளியிட்ட கூட்டு உத்தரவில், ‘பிஎச்.டி பட்டங்களை வழங்குவதற்கான தரநிலைகளை பராமரிப்பதற்காக, கடந்த 2016ல் அறிவிக்கப்பட்ட யுஜிசி விதிமுறைகள் மற்றும் திருத்தங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பெறும் பல்கலைக்கழக முனைவர் பட்டம் செல்லாது. சேரும் போது, யுஜிசி ஒழுங்குமுறை 2016க்குட்பட்டு சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளன.

Related Stories: