கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம்: சிபிசிஐடி

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி சார்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை நடைபெற்ற இடத்தில் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்தில் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகராஜ் வாகன விபத்து தொடர்பாக சேலத்தில் விசாரணை செய்ய முடிவு செய்யாட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான குறுக்கு விசாரணை இன்று உதகை அமர்வு நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்ட பிறகு இன்று முதன் முறையாக விசாரணைக்கு வந்தது.  

இந்த விசாரணையின் போது ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த விசாரணையை சிபிசிஐடி விசாரிக்க உள்ளதாக மனு தாக்கல் செய்தனர். பின்னர் தனிப்படை விசாரித்த 316 பேரின் விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் நீதிபதியிடம் தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதி டிசம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையானது சிபிசிஐடி எஸ்பி மாதவன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி முருகவேல், சந்திரசேகர், அண்ணாதுரை, வினோத் உள்ளிட்ட 3 டிஎஸ்பி-க்கள் ஒரு ஆய்வாளர் உள்பட ஒரு தனிடப்படை அமைக்கப்பட உள்ளது.

சிபிசிஐடி-ஐ பொறுத்தவரையில் தனியாக முதல் தகவல் அறிக்கை தக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாட்சிகளை அவர்களது இல்லத்துக்கே சென்று விசாரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கோடநாடு பங்களாவில் ஏற்கனவே 2 முறை சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்த  நிலையில், மீண்டும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்யவுள்ளனர். கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது இல்லத்தில் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன விபத்தில் இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வழக்கையும் விசாரிக்க சேலத்திற்கு ஒரு தனிபடை சென்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: