கர்மாவின்படி இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: கர்மாவின்படி போக்குவரத்து காவலராக நியமிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனுக்களின் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைப்படி மனுதாரருக்கு நிவாரணம் தர நீதிமன்றம் விரும்புவதாக கூறி, மனுதாரரை மதுரை மாவட்டத்திலேயே போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தென்மண்டல ஐஜி தரப்பில் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவுக்கு ஏற்கனவே தடை விதித்தது. ஸ்ரீமுருகன் தரப்பிலும் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: