கொல்லங்கோடு அருகே ரோந்து சென்றபோது பெண் எஸ்ஐயை கொல்ல முயன்ற 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாகர்கோவில்: கொல்லங்கோடு அருகே பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. உள்ளிட்டோரை ஆயுதங்களை காட்டி மிரட்டி கொல்ல முயன்ற வழக்கில் 7 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மெர்சி ரமணிபாய். கடந்த 4.6.2015ல் இவரது தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது  நீரோடி துறையில் ஆயுதங்களுடன்  சிலர் நிற்பதாக வந்த தகவலின் பேரில் போலீசாருடன் அங்கு எஸ்.ஐ. மெர்சி ரமணிபாய் சென்றார். ஆயுதங்களுடன் இருந்த கும்பல், எஸ்.ஐ. மெர்சி ரமணிபாய் மற்றும் போலீசாரை தாக்கி கொல்ல முயன்றனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிந்து, மார்த்தாண்டம் துறை சூசைபுரத்தை சேர்ந்த ஜெரிபாய், சாலட் என்ற மரிய சாலட், சைஜூ, வியாகுல் அடிமை, ஏசுதாஸ், ராஜி, கிறிஸ்துதாசன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை குழித்துறை மகளிர் நீதிமன்ற நீதிபதி விசாரித்து சம்பந்தப்பட்ட 7 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: