இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற சில மணி நேரங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்த ரிஷி சுனக்: துணைப் பிரதமராக டொமினிக் ராப்பை நியமித்து உத்தரவு..!!

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற சில மணி நேரங்களில் அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் டொமினிக் ராப் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். புதிய அரசை அமைக்குமாறு மன்னர் அழைப்பு விடுத்ததின் பேரில் இந்தியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கிலாந்தின் 57வது பிரதமராக பதவியேற்றுள்ள 42 வயதான ரிஷி, அந்த நாட்டின் 200 ஆண்டுகால வரலாற்றின் மிகவும் வயது குறைந்த பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். பதவியேற்ற சில மணி நேரங்களில் அதிரடியாக அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இருந்த பலரை நீக்கினார். லிஸ் ட்ரஸ் பதவி காலத்தில் டொமினிக் ராப்பிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பிரதமர் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த ஜோனல் ஹண்ட், வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோன்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சர் வென் பாலிஸ் ஆகியோர் அதே பதவியில் தொடர்கிறார்கள்.

அரசு விதிகளை மீறியதாக அண்மையில் ராஜினாமா செய்த அமைச்சர் சுயலாக், தற்போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் போட்டியில் தோல்வியடைந்த பென்னி, நாடாளுமன்ற கீழமையின் தலைவரை நீடிக்கிறார். இதனிடையே ரிஷி சுனக் பிரதமரை பதவியேற்ற உடன், அந்த நாட்டு பங்குசந்தையில் புள்ளிகள் ஏற்றம் கண்டன. லிஸ் ட்ரஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு இல்லாத அளவில் பங்கின் மதிப்பு உயர்ந்தது.

Related Stories: