ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் தாபா, லவ்லினா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி-25 வீரர், வீராங்கனைகள் தேர்வு

புதுடெல்லி : ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அணிக்கு ஷிவா தாபா, மகளிர் அணிக்கு லவ்லினா போர்கோஹைன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜோர்டான் தலைநகர் அம்மானில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய பயிற்சி முகாம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வந்த நிலையில், ஆசிய போட்டியில் கலந்துகொள்ள உள்ள இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சாம்பியன் நிக்கத் ஜரீன், காமன்வெல்த் சாம்பியன் அமித் பாங்கல், நீத்து கங்காஸ் ஆகியோர் இந்த தொடரில் இருந்து காயம் மற்றும் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளனர். ஆண்கள் அணிக்கு ஷிவா தாபா, மகளிர் அணிக்கு லவ்லினா போர்கோஹைன் தலைமையேற்கின்றனர். 13 வீரர்கள், 12 வீராங்கனைகள் என மொத்தம் 25 பேர் அடங்கிய இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்க வேட்டை நடத்த உள்ளது.

ஆண்கள் அணி: கோவிந்த் சஹானி (48 கிலோ), ஸ்பர்ஷ் குமார்  (51 கிலோ), சச்சின்  (54 கிலோ), ஹுசாமுதீன்  (57 கிலோ), எடாஷ் கான்  (60 கிலோ), ஷிவா தாபா  (63.5 கிலோ), அமித் குமார்  (67 கிலோ), சச்சின்  (71 கிலோ), சுமித்  (75 கிலோ), லக்‌ஷியா  (80 கிலோ), கபில்  (86 கிலோ), நவீன்  (92 கிலோ), நரேந்தர்  (+92 கிலோ).

மகளிர் அணி: மோனிகா  (48 கிலோ), சவிதா  (50 கிலோ), மீனாக்‌ஷி  (52 கிலோ), சாக்‌ஷி  (48 கிலோ), பிரீத்தி  (48 கிலோ), சிம்ரன்ஜித்  (48 கிலோ), பர்வீன்  (48 கிலோ), அங்குஷிதா போரோ, பூஜா  (48 கிலோ), லவ்லினா போர்கோஹைன்  (48 கிலோ), சவீட்டி  (48 கிலோ), அல்பியா பதான்  (48 கிலோ).

Related Stories: