பெங்களூரு: 12அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் பெங்களூரு புலஸ் 42-32 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 51-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பந்தாடியது.