மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க நடைபெறும் மழைநீர் வடிகால்கள் பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: பருவமழை காலங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க நடைபெறும் மழைநீர் வடிகால்கள் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

தீபாவளியை காரணமாக கொண்டு சென்னை அடையாறில் நடைபெற்று வரும் மழைநீர் பணிகளை நிறுத்திவிட கூடாது எனவும் மாற்று பணியாளர்களை கொண்டு துரிதமாக பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் கட்டமைக்கக்கூடிய கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சிங்கார சென்னை திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.270 கோடி மதிப்பில் 6. கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ளநிவாரண நிதியின் கீழ் சுமார் 107 கிலோ மீட்டர் நீளத்திற்கும் என சென்னை மாநகராட்சியின் முழுவதிற்கும் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளக்கூடிய பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் இதர பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: