பாஜ உடன் உறவு இல்லை எனில் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்வீர்களா? நிதிஷிடம் பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த மாதம் பாஜ கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணியில் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நடைபயணத்தின்போது அவர் பேசுகையில் ‘‘ பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்,உண்மையில் பாஜவுக்கான வாசலை அவர் முழுவதுமாக மூடிவிடவில்லை. தன்னுடைய கட்சி எம்பியும் மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலமாக பாஜவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்,‘‘பிரசாந்த் கிஷோர் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் இளையவர், என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்’’ என்று கூறினார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் நேற்று கூறுகையில்,‘‘ எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் ஹரிவன்ஸ் மூலம் இன்னும் பாஜவுடன் தொடர்பில் உள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னும்  ஹரிவன்ஸ் சிங் இன்னும் பதவி விலகாமல் இருப்பது ஏன்? அவரை பதவி விலகும் படி நிதிஷ் சொல்வாரா என்று கேள்வி கேட்டார்.

Related Stories: