10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் சுரானா குழும தலைவரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற 4000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி நிறுவன இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து. இந்த வழக்கில் நால்வரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ராகுல் தினேஷ் சுரானா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இதுபொதுமக்கள் சம்பந்தப்பட்ட 10 ஆயிரம் கோடி அளவிலான  மிகப்பெரிய மோசடி. இது கடுமையான பொருளாதார குற்றமாகும். பொருளாதார குற்றங்கள் சமுதாயத்துக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. மனுதாரர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடப்பதால் முன்கூட்டியே ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: