புதுடெல்லி: பசிபிக் கடலின் மீது கடந்த 2 மாதங்களாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமானிகள், பறக்கும் தட்டுகள் போல் மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர். பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் அல்லது விசித்திரமான உருவம் கொண்ட வேற்று கிரகவாசிகள் வசிக்கக் கூடும் என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. விண்வெளியில் இருந்து அடிக்கடி பறந்து வரும் பறக்கும் தட்டுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சில மாதங்களுக்கு முன் திடீரென முளைத்த உலோக தூண்கள் போன்றவை இந்த சந்தேகத்தை அதிகமாக்கி வருகின்றன. இந்நிலையில், பசிபிக் கடலின் மீது கடந்த 2 மாதங்களாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமான நிறுவனங்ளின் விமானிகள், மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
