டோக்கியோ: ஆர்ஆர்ஆர் படம் ஜப்பானில் வெளியாவதையொட்டி அப்பட ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் அங்கு சென்றுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியானது. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலித்தது. சில நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த நாடுகளில் இப்போது திரையிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த படம் ஜப்பானில் திரைக்கு வர உள்ளது. இதற்கான சிறப்புக் காட்சி டோக்கியோவில் திரையிடப்பட்டது.