பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஷமி 3 விக்கெட் எடுத்து அசத்தினார். அதே நேரத்தில் விராட்கோஹ்லியின் பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இந்த போட்டியில் விராட் கோஹ்லி அருமையாக பீல்டிங் செய்து டிரெண்ட் ஆனார். ஹர்ஷல் படேல் வீசிய பந்தை தொட்டுவிட்டு ரன் எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிம் டேவிட்டை விராட் கோஹ்லி ரன் ஆவுட் செய்த விதம் ரசிகர்களை பூரிப்படைய வைத்தது. பந்தை எடுத்து பாய்ந்தபடியே ஸ்டெம்பை நோக்கி வீசி ரன் அவுட் செய்தார்.