ரூ. 50 லட்சம் ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் சுந்தர்சாம் கைது

சண்டிகர்: பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு துறை ஏஐஜி.க்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சுந்தர்சாம் அரோரா கைது செய்யப்பட்டார். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் சுந்தர் சாம் அரோரா. இவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கடந்த ஜூனில் பாஜ.வில் இணைந்தார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது, அமைச்சராக இருந்தபோது தொழில்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை ஏஐஜி மன்மோகன் குமாரிடம் பேரம் பேசினார். முதல் கட்டமாக, ரூ. 50 லட்சம் தருவதாக கூறினார். இது குறித்து தனது மூத்த அதிகாரிகளுக்கு ஏஐஜி தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி, சுந்தர் சாம் லஞ்சம் கொடுக்க வந்த போது மொகாலி மாவட்டத்தில் உள்ள சிராக்பூரில் வைத்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: