புத்தாடை வாங்க குவிந்த மக்கள் ஜிஎஸ்டி சாலையில் கடும் நெரிசல்

தாம்பரம்: குரோம்பேட்டை பகுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. தி.நகரில் உள்ள பெரும்பாலான பிரபல துணிக்கடை, நகைக்கடைகள் குரோம்பேட்டைக்கு வந்துவிட்டது. இதனால், விசேஷ நாட்கள், பண்டிகை கால நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க, சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஜிஎஸ்டி சாலையில் சினிமா தியேட்டரும் இருப்தால் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நெரிசல் மிகுந்து காணப்படும். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் குரோம்பேட்டை பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால், தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக குரோம்பேட்டையில் உள்ள பிரபல கடைகளில் குவிந்தனர். இதனால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் முதல் இரவு வரை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் 3 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

Related Stories: