டெல்லி துணை முதல்வர் சிசோடியா இன்று கைது?

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ  சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில்  கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ  குற்றம்சாட்டியது. இதில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது  அது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிசோடியாவிடம் சிபிஐ பலமுறை விசாரித்து விட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு  சிசோடியாவுக்கு  சிபிஐ  சம்மன் அனுப்பி உள்ளது.

இது குறித்து சிசோடியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது வீட்டில் சிபிஐ 14 மணி நேரம்  சோதனை நடத்தியது.  வங்கி லாக்கரையும் திறந்து பார்த்தது. அதன்பின், எனது கிராமத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் சிபிஐ அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது,  நாளை காலை 11 மணிக்கு என்னை சிபிஐ தலைமையகத்திற்கு அழைத்திருக்கிறார்கள். நான் அங்கு சென்று அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். வாய்மையே வெல்லும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், அவரை இந்த வழக்கில் இன்று கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories: