மாணவர்களுக்கு போதை பொருள் விற்பவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்: முன்னாள் டிஜிபி தேவாரம் பேட்டி

கோபி: தமிழகத்தில் மாணவ, மாணவிகள், குழந்தைகளை குறிவைத்து போதை பொருள் விற்பவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என கோபியில் முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபி மொடச்சூரில்  ரைபிள் கிளப் தொடக்க விழா   நடந்தது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் அளித்த பேட்டி:

ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே ரைபிள் சூட்டிங்  இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளதால் நல்ல முன்னேற்றம் உருவாகும். போதை பொருளை முழுமையாக தடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை காக்க முடியும். போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டுக் கொல்ல

வேண்டும்.

தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால்   கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. அது மாதிரி போதை பொருள் கடத்தலுக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே கூறும் அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: