கழிவு மேலாண்மையில் அலட்சியம் கர்நாடகா அரசுக்கு ரூ.2900 கோடி பைன்; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

பெங்களூரு: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட, திரவ கழிவு மேலாண்மையை சீராக மேற்கொள்ள தவறிய கர்நாடகா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2,900 கோடி அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 15வது பிரிவின் கீழ், கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட, திரவ கழிவு மேலாண்மை கண்காணிக்கப்பட்டு வந்தது. அதில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை இம்மாநில அரசு ஒழுங்காக பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டது. திட, திரவ கழிவுநீரை மறுசுழற்சி செய்யாமல் கடந்த 8 ஆண்டுகளாக அலட்சியம் காட்டி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக திரவ கழிவு மேலாண்மையை கடைபிடிக்காமல் சட்டபூர்வ ஒப்பந்தங்கள் காலவதியான பிறகும் ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கி வந்துள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்நாடக அரசு தொடர்ந்து இதுபோன்று அலட்சியத்தில் ஈடுபடாமல் இருக்கவும், கடந்த கால சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காகவும் ரூ.2,900 கோடி இழப்பீடு வழங்கும்படி கர்நாடகா அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி, ஆதர்ஷ்குமார் கோயல், கடந்த 13ம் உத்தரவிட்டார்.

Related Stories: