அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான்: அமெரிக்க அதிபர் பைடன் பேச்சு

வாஷிங்டன்: ‘அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் மாறிவிட்டது,’ என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம்சாட்டி உள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள், பொருளாதார தடைகள், நிதியுதவி, ராணுவ உபகரணங்கள் போன்ற பல்வேறு உதவிகளை உக்ரைனுக்கு செய்து வருகிறது. ரஷ்யாவுக்கு ஆயுதங்களை கிடைப்பதை தடுக்க கிரிமீயாவை இணைக்கும் மிகப்பெரிய பாலத்தை கடந்த வாரம்  உக்ரைன் ராணுவம் தகர்த்தது. பதிலடியாக உக்ரைனின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து பேசிய அதிபர் புடின், தீவிரவாத தாக்குதல் போன்ற செயல்பட்டால், மக்களை பாதுகாக்க ரஷ்யா எதையும் செய்யும். அணு ஆயுத தாக்குதலுக்கும் தயங்காது’ என தெரிவித்தார்.   

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பைடன் பேசியதாவது: எந்தவித ஒற்றுமையும் இன்றி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு. உலகம் வேகமாக மாறி வருகிறது. நாடுகள் தங்கள் கூட்டணிகளை மறுபரிசீலனை செய்கிறது. ஆபத்து நிறைய இருக்கிறது. அமெரிக்கா உலகை முன்னெப்போதும் இல்லாத இடத்திற்கு இட்டுச் செல்லும் திறன் கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: