நீர்வீழ்ச்சியின் பாலம் உடைந்தது; 40 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு: கோவாவில் பரபரப்பு

துத்சாகர்: கோவாவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்லக்கூடிய பாலம் உடைந்ததால், அங்கு சிக்கியிருந்த 40 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோவா-கர்நாடக எல்லையில் பெய்த கனமழையின் காரணமாக, தெற்கு கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. அந்தப் பாலத்தில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிர் பயத்தில் பீதியடைந்தனர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர், அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து ‘திரிஷ்டி லைஃப் சேவர்ஸ்’ அமைப்பு ெவளியிட்ட அறிக்கையில், ‘கோவா-கர்நாடக எல்லையில் பெய்த கனமழை காரணமாக, துத்சாகர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. இதனால் அங்கிருந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால், அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீண்டும் திரும்ப முடியாமல் தவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கனமழை பெய்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு துத்சாகர் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: