ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 42 கிலோ கஞ்சா பறிமுதல்-தேனியை சேர்ந்த 3 பேர் கைது

கரூர் : ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 42 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனியை சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய சரகம் பெரிய திருமங்கலம் பிரிவு அருகே அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அந்த லாரி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு எருமை மாடுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் லாரியில் போலீசார் சோதனை செய்த போது, 2 வெள்ளை சாக்கில் 42 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ₹21லட்சமாகும். இதுதொடர்பாக போலீசார், லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கவுதம் (27), ராம்குமார் (29), கரண்குமார் (23) ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: