பெங்களூரு எப்சியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடருமா சென்னையின் எப்சி?

சென்னை: 11 அணிகள் பங்கேற்றுள்ள 9வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி)- ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஐதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் பார்தோலோமிவ் 13வது நிமிடத்திலும், ஹலீச்சரன் 69, போர்ஜா 73வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆனால் கவுகாத்தி வீரர்கள் கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்சி அணி வெற்றி பெற்றது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.- முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. அனிருத் தபா தலைமையிலான சென்னை முதல் போட்டியில், 2-1 என கொல்கத்தாவை வீழ்த்தியது. இதே போல் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு முதல் ஆட்டத்தில் 1-0 என கவுகாத்தியை வென்று இன்று இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் களம் காண்கின்றன. இரு அணிகளும் இதற்கு முன் 11 முறை மோதி உள்ளன. இதில் பெங்களூரு 7, சென்னை 2 போட்டியில் வென்றுள்ளன. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது. சென்னையில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ஐஎஸ்எல் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: