தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீட் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு 2020ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12  வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: