கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றாமல் டிஸ்மிஸ் என மிரட்டுவதா?: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து பணி நீக்கம் செய்வதாக மிரட்டக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

உரிமை கோரி ஜனநாயக வழியில் போராடும் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கு பதிலாக சர்வாதிகாரத்தனமாக மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும். மாறாக, போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாட்டு அரசு முன்வர

வேண்டும்.

Related Stories: