காலிஸ்தானி பிரிவினைவாத விவகாரம்; இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த ‘இன்டர்போல்’.! ஒன்றிய அரசுக்கு பின்னடைவு

புதுடெல்லி: காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பு விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளதால், ஒன்றிய அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தானி பிரிவினைவாத அமைப்பானது தனிநாடு கோரியும், இந்தியாவுக்கு எதிராக சதிவேலைகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வௌிநாட்டில் பதுங்கியிருக்கும் குர்பத்வந்த் சிங்குக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவதற்காக ஒன்றிய அரசின் தரப்பில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், ‘குர்பத்வந்த் சிங்குக்கு எதிரான போதுமான குற்றச்சாட்டுகள், தகவல்கள் மற்றும் ஆவணங்களை இந்திய அதிகாரிகள் முறையாக சமர்பிக்கவில்லை. சிறுபான்மையினர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக ‘உபா’ சட்டம் பாய்வது குறித்தும் உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை. குறிப்பாக அவர்களின் உரிமைகள் மதிக்கப்படவில்லை. இருந்தாலும், காலிஸ்தானி அமைப்பானது பிரிவினைவாத அமைப்பு என்பதை ஒத்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: