6 நாட்கள் பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 6 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் நிர்மலா சீதாராமன், சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டம், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் ஏலன், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் ‘இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு’ என்ற தலைப்பில் நிர்மலா சீதாராமன் உரையாற்றுவார் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: