‘நீலகிரி மகளிர் லீக்’ கால்பந்து போட்டி கிக்கிட் அவுட் அணி வெற்றி

ஊட்டி :  நீலகிரி மகளிர் கால்பந்து லீக் துவங்கியுள்ள நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் கிக்கிட் அவுட் அணி 8-0 என்ற கோல் கணக்கில் நீலகிரி யங்ஸ்டர் அணியை வீழ்த்தியது.

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட, மாநில கால்பந்து போட்டிகள் ஆண்டுதோறும் ஊட்டியில்  நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்முறையாக மகளிர் கால்பந்து லீக் போட்டி தொடர் நடத்த திட்டமிடப்பட்டது.

இதில், நீலகிரி யங்ஸ்டர், ராபின் எப்சி., குட்செப்பர்டு எப்சி, எப்ரான் பள்ளி அணி, நீலகிரி மெட்ரிகுலேசன் எப்சி, ெலஜன்ட் ஸ்போர்ட் எப்சி, கிக்கிட்அவுட், ஷூட்டர் எப்சி, ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டிகள் நேற்று ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் துவங்கியது. முதல் போட்டியில் நீலகிரி யங்ஸ்டர் அணியும், கிக்கிட் அவுட் அணியும் மோதின. இதில் கிக்கிட் அவுட் அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. மார்ச் மாதம் வரை மொத்தம் 28 போட்டிகள் நடக்கிறது.

லீக் போட்டிகளின் இறுதியில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வழங்கப்படும். மேலும் தமிழ்நாடு பெண்கள் லீக் போட்டிக்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. போட்டி துவக்க விழாவில் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் மணி, பொருளாளர் நாகராஜ், செயலாளர் மோகன முரளி  கேத்தி ஊர் தலைவர் சங்கரன், பிபா, உறுப்பினர் மசார் அகமது, கால்பந்து சங்க செயற்குழு உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: