வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்தனர். வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
