இந்திய மக்களின் நலனே முக்கியம்; எந்த நாட்டிடமும் கச்சா எண்ணெய் வாங்குவோம்: அமெரிக்காவில் ஒன்றிய அமைச்சர் அதிரடி

வாஷிங்டன்: ‘எந்த நாட்டில் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்,’ என்று ஒன்றிய பெட்ரோலியஅமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால், தனது கச்சா எண்ணெய்யை நட்பு நாடுகளுக்கு குறைந்த விலைக்கு விற்க ரஷ்யா முன்வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ‘எங்கள் நாட்டு மக்களின் நலனே முக்கியம்’ என ஒன்றிய அரசு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி, வாஷிங்டன்னில்  நேற்று அளித்த பேட்டியில், ‘உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர், நுகர்வோர் நாடான இந்தியா, எந்த நாட்டிடமும் கச்சா எண்ணெய் வாங்கும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை. கொள்கையில் தெளிவு இருந்தால், குறைவான விலையில் மக்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்ற கொள்கை இருந்தால், எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கலாம்,” என்றார்.

Related Stories: