ஆவடியில் அடுத்தடுத்த 6 கடைகளில் ரூ.8 லட்சம், லேப்டாப் கேமரா கொள்ளை: 3 பேருக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடியில் அடுத்தடுத்துள்ள ஆறு கடையின் பூட்டை உடைத்து ரூ. 8 லட்சம், 2 லேப்டாப் மற்றும் 2 உயரக கேமராக்களை  கொள்ளையடித்த மூன்று மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி கோமிரா கட்சிகள்  கொண்டு  தேடி வருகின்றனர். ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விவேகானந்தா பள்ளி எதிரில் உள்ளது எம்.கே.எஸ் காம்ப்ளக்ஸ். இங்குள்ள முதல் தளத்தில் 7 கடைகள் உள்ளன.  இந்த கடைகளை  நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு  சென்றனர். மீண்டும், நேற்று காலை சுபம் கன்சல்டன்ஸின் உரிமையாளர் நாகராஜ்  வழக்கம் போல காலையில் கடையை திறக்க வந்த போது  அனைத்து கடைகளின் பூட்டும் உடைத்து அதில் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை  மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மற்ற கடைக்காரர்களுக்கும் தகவல் கூறி அங்கே வந்தனர்.

இதில், திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரவீன் (27) எஸ்.ஆர்.டென்டல் கேர் நடத்தி வருகிறார். இவரது கடையில் ஒரு லேப்டாப் ரூ.3 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (44) பவுன் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது கடையில் ரூ.90 ஆயிரம்  மதிப்புள்ள இரண்டு கேமரா மற்றும்  ரூ.3500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மேலும்  ஆவடி ராஜ் பாய் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (39) சுபம் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். இவரது கடையில் முப்பதாயிரம் மதிப்புள்ள ஒரு லேப்டாப், ரூ.8 லட்சத்தை திருடிச்சென்றுள்ளனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (40) ஸ்டைல் சோன் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ரூ.10,000 மற்றும் ரூ.5000 மதிப்புள்ள பொருட்களும் ஆவடி கோவர்தனகிரி பகுதியை சேர்ந்த சதீஷ் (50) சுவாதி பியூட்டி பார்லர் கடையில் ரூ.500. ஆவடி வசந்த நகர் பகுதியை சேர்ந்த கவுஸ் (54) ஜி.என் டெக்ஸ் கடை நடத்தி வருகிறார் ரூ.7000. இதில், ஒரு கடை காலியாக இருந்த நிலையில், ஆறு கடைகளின் பூட்டை உடைத்து, அதில் இருக்கும் விலை மதிப்புள்ள இரண்டு கேமரா மற்றும் ரூ. 8 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

உடனே, இது குறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவதன்று ஆவடி வசந்த நகர் பகுதியில் ஆட்டோவில் மூன்று நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோவை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு இருவர் மட்டும் விவேகானந்தா பள்ளி எதிரில் உள்ளது எம்.கே.எஸ்  காம்ப்ளக்ஸ்க்கு இரவு 11.45 மணி அளவில் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சுமார் 1 மணி அளவில் வெளியே வரும் காட்சிகள் சிசிடிவி கோமிராவில் பாதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர்,  தாங்கள் வந்த ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தபோது அது ஸ்டார்டாகவில்லை. எனவே, அருகில்  பூட்டியிருந்த பைக்கை உடைத்து மூன்று மர்ம நபர்களும்  அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.  ்போலீசார் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து அந்த மூன்று மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: