யுபிஎஸ்சி தகவல் அறிய மொபைல் ஆப் அறிமுகம்

புதுடெல்லி: ஒன்றிய தேர்வாணையத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்புகள், முடிவுகளை இனி மொபைல் ஆப்-ல் பார்க்கலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வினை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. www.upsc.gov.in என்ற இணைய பக்கத்தில்இந்த தேர்வுகள் தொடர்பான தகவல்களை அது  வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், மாறும் கால சூழலுக்கு ஏற்ப, தேர்வுத் தயாரிப்பு மற்றும் ஆள்சேர்க்கும் முறைகளை வசதிகளை மேலும் எளிமையாக்கும் விதத்தில், ‘யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ செயலி’ (upscofficial app) என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தேர்வாணையத்தின் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் ஆப்-ல் கிடைக்கும் இந்த செயலி முற்றிலும் இலவசமானது. ஆனால், இந்த செயலி மூலம் நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

Related Stories: