சிவகங்கை, சேலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் சோதனை..!

சிவகங்கை: சிவகங்கை, சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதுடன் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வீட்டில் இன்று அதிகாலை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது உள்ளூர் காவல் துறையினரும் உடனிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதேபோல சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த விவகாரத்தில் கடந்த ஆண்டு சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி, ஆகியோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். ஓமலூர் போலீஸ் 2 போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை கடந்த 4 மாதங்களாக என்ஐஏ தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டுசாவடி என்ற இடத்தில் இளைஞர்கள் தங்கிய இடத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது சேலம் பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: