மெக்சிகோவில் மர்ம கும்பல் அட்டூழியம் மேயர் உட்பட 18 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோசிட்டி:  மெக்சிகோவில் மர்மகும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேயர் உட்பட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மெக்சிகோவின் கவுர்ரேரோ மாகாணத்தில் உள்ள சான் மிகுல் டோடோலாபான் நகரில் நேற்று முன்தினம் மர்ம கும்பல் ஒன்று சிட்டி ஹாலில் இருந்த பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியது. இந்த துப்பாக்கி சூட்டில் மேயர் காண்ராடோ மென்டோசா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மேயர் உட்பட மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் மாலை, அருகே உள்ள மோர்லாஸ் மாகாணத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, மர்ம கும்பல் சுட்டுக்கொன்றுள்ளது.

மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவல் பாதுகாப்பு உத்திகள் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்த நேரத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: