ஆஸ்திரேலியாவுக்கு போறோம்!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடர், ஆஸ்திரேலியாவில் வரும் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று அதிகாலை மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா சென்றனர். பெர்த் நகரில் முகாமிட்டு பயிற்சி மேற்கொள்ளும் இந்திய வீரர்கள், உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் 17ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 19ம் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் அக். 23ம் தேதி மெல்போர்ன் அரங்கில் நடக்கிறது. ஆஸி. புறப்படும் முன்பாக ஹர்ஷல் படேல், யஜ்வேந்திர சாஹலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பியை நட்சத்திர வீரர் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: