ரஷ்யா அதிரடி: உக்ரைன் அணுமின் நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல்

கீவ்: உக்ரைனின் ஜபோர்ஜியாவில் அணுமின் நிலையத்தின் அருகே ரஷ்யா அடுத்தடுத்து ஏவிய 7 ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 8வது மாதமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய லுஹான்க்ஸ் உள்ளிட்ட 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக இருதினங்களுக்கு முன் புடின் அறிவித்தார். இதை அங்கீகரிக்க மாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா சட்ட விரோதமாக இணைத்த பகுதியில் அமைந்துள்ள 3 முக்கிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு இருப்பதாக, இந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அறிவித்தார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுஉலை அமைந்துள்ள ஜபோர்ஜியா அருகே உள்ள பகுதியில் ரஷ்ய ராணுவம் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அது அடுத்தடுத்து நடத்திய 7 ராக்கெட்  தாக்குதல்களால், அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 வயது சிறுமி உட்பட காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: