திருமணமாகி 10 ஆண்டு கழித்து பிறந்த மகன் கொடிக்கயிறு இறுக்கி சிறுவன் பரிதாப சாவு

மதுரை: மதுரையில் துணி காயப்போடும் கொடி கயிற்றில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. கூலித்தொழிலாளி. மனைவி லட்சுமி. இவர்களது மகன் விசாகன் (10) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டின் அருகில் நேற்றுமுன்தினம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, துணி காயப்போடும் கொடிக்கயிற்றை கழற்றி, அதனை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு விளையாடியபோது, எதிர்பாராத நிலையில் கயிறு கழுத்தை அறுத்துள்ளது. அவிழ்க்க முயன்றபோது கயிறு மேலும் இறுக்கி மூச்சு விட முடியாமல் திணறி கீழே விழுந்தான். அக்கம்பக்கத்தினர் உதவியோடு மகனை தாய் லட்சுமி மீட்டு, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு துரைப்பாண்டி தம்பதிக்கு பிறந்த ஒரே மகன் விசாகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: