கஞ்சா விற்பனை பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன டிவி நிருபரின் பைக் தீ வைத்து எரிப்பு

புழல்: சென்னை புழல் அருகே அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் கிறிஸ்துராஜன். இவர், சென்னையில் ஒரு தனியார் டிவி நிருபராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதை கிறிஸ்துராஜன் தட்டிக் கேட்டுள்ளார். மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி, தனது பைக்கை வீட்டுவாசலில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.  

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டுக்குள் வெளியே தீப்பிடித்து எரிவதை பார்த்து கிறிஸ்துராஜன் வெளியே வந்து பார்த்திருக்கிறார். அப்போது அவரது பைக்கை மர்மநபர்கள் தீவைத்து எரித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. இதில் அந்த பைக் முழுவதுமாக எரிந்து நாசமானது. இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: