சீனா எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

தவாங்: அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் விமானப்படைக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டரில் 2 விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நடுவானில் திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டு அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

Related Stories: