திருத்துறைப்பூண்டியில் குறுவை நெல் அறுவடை விறுவிறுப்பு

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தொடர்ந்து 4வது ஆண்டாக குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் 20 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து குறுவை அறுவடை பகல், இரவாக நடந்து வருகிறது. குறுவை அறுவடைக்காக வெளிமாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதிக்கு வந்துள்ளது. இதுவரை 30 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது.

அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தாலுகா முழுவதும் 50 இடங்களில் நெரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் வயலில் தண்ணீர் நின்றதால் நெல்லி ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் அறுவடை செய்த நெல்லை, சாலைகளில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: