முதல் சுற்று தேர்தலில் பின்தங்கினார் பிரேசில் அதிபர்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனரோவை எதிர்த்து முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 98.8 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை முடிவில், முதல் சுற்றில் சில்வாவுக்கு 48.3 %, போல்சனாரோவுக்கு 43.2 % வாக்குகளும் கிடைத்துள்ளது.

தேர்தல் விதிமுறை படி, வெற்றி பெற்றவர் 50 % வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால், போல்சொனாரோ, சில்வா 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் 2ம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Related Stories: