விழுப்புரம் : ஆயுதபூஜையையொட்டி விழுப்புரத்தில் அலங்காரம், தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.தமிழகத்தில் நாளை 4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமிவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் விழுப்புரம், வளவனூர் உள்ளிட்ட நகரபகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழம், காய்கறிகள், கரும்பு, சுண்டல், வெல்லம், சர்க்கரை போன்றவற்றின் விற்பனை விழுப்புரத்தில் களைகட்டியது.