செஞ்சியில் நண்பர்கள் நூதன வாழ்த்து; ஆட்டோ டிரைவர் பிறந்தநாளில் மாட்டு சாணத்தால் அபிஷேகம் வீடியோ வைரல்

செஞ்சி: செஞ்சியில் ஆட்டோ டிரைவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மீது மாட்டு சாணத்தை ஊற்றி நீண்டநாள் வாழ நணபர்கள் அபிஷேகம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி  நோய் நொடி தாக்காமல் ஆராக்கியமாக இருப்பதற்காக தண்டபாணி மீது அவரது நணபர்கள் மாட்டு சாணத்தை  கரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து  நூதனமுறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. பிறந்த நாளில் கேக் வெட்டுவதும், மது அருந்துவதுமாக கொண்டாடி வரும் இளைஞர்கள் மத்தியில் நூதன முறையில் மாட்டு சாணத்தை கரைத்து நண்பர் மீது ஊற்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: