குளித்தலை அருகே அகதிகள் முகாமில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓ அதிரடி கைது

குளித்தலை:  குளித்தலை அருகே இரும்பூதிபட்டி முகாமில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விஏஓவை போலீசார் கைது செய்தனர்.

கரூர்  மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் அகதிகள் முகாமில் ஒரு பெண்  தனது கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அகதிகள் முகாமில்  வீட்டில் பகலில்  அந்த பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்போது கிருஷ்ணராயபுரம் ஊராட்சி  ஒன்றியம் சிவாயம்  வடக்கு கிராம நிர்வாக அலுவலரான, அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தை சேர்ந்த அன்புராஜ் (36), முகாமில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த பெண் தனியாக இருப்பதை பார்த்ததும் அவரை  பாலியல்  பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது பெண் சத்தம் போட்டதால், இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென்றார்.  இது குறித்து அந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜை கைது செய்தனர்.

Related Stories: