ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: எஸ்டிபிஐ மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, எஸ்.எம்.ரஃபீக் அகமது, பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன்,  அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், பொருளாளர் அமீர் ஹம்சா, செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின் மீது நெருக்கடி கொடுத்து தடை நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: