நிர்வாக காரணங்களுக்காக இணை இயக்குநர்கள் 3 பேர் பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள உத்தரவு: நிர்வாக காரணங்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்கக, இணை இயக்குநர் உமா தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராகவும், இணை இயக்குநர் சசிகலா தனியார் பள்ளி இயக்ககத்தின் இணை இயக்குநராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராகவும் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. மேலும் சசிகலாவிற்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநராக கூடுதல் பொறுப்பும்,  அமுத வல்லிக்கு பொது நூலக இயக்கக இணை இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

Related Stories: