உக்ரைன் பிராந்தியங்கள் இணைப்பு விவகாரம்; ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் புறக்கணிப்பு

ஐ.நா: உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்ததை எதிர்த்து, ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை, ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வியடைய செய்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்து நீடிக்கிறது. ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படையினர் கைப்பற்றிய கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த வாரம் நடத்தப்பட்டது.

இதில், பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனின் இந்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின்  நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். ஆனால், இது ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா.வும், உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பது சட்ட விரோதமான நில அபகரிப்பு என்று அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சட்டவிரோத வாக்கெடுப்பை கண்டித்து அமெரிக்காவும் அல்பேனியாவும் ஐ.நாவில் வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள 15  நாடுகள் வாக்களித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. சீனா, காபோன், இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை வாக்களிக்கவில்லை.  ஆனால், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வியடைய செய்தது.

Related Stories: