அக்னி வீரர்கள் தேர்வு முகாமை தகர்க்க சதி: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர், பாரமுல்லா பகுதியில் நேற்று காலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர்  ஏடிஜிபி தெரிவித்தார். பாரமுல்லா மூத்த எஸ்பி கூறுகையில், ‘‘பாரமுல்லா எடிபோராவில் அக்னி வீரர்கள் தேர்வுக்காக ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். இதை சீர்குலைக்கும் நோக்கில், அக்னி வீரர்கள தேர்வு முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வந்துள்ளனர். ஆனால், அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. தீவிரவாதிகளிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ரஜோரி, பாரமுல்லா பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், அந்த கூட்டங்கள் வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: